Advertisement

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் முன்னேற்றம் - ஹாலப் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிப் போட்டிக்கு முன்னணி வீரர்கள் ஸிட்சிபாஸ் , மெத்வதேவ் ஆகியோர் முன்னேறியுள்ளனர். அதேநேரத்தில், பெண்கள் பிரிவில் சிமோனா ஹாலப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

மெல்பரினில் நடைபெற்று வரும் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்வதேவ், அமெரிக்காவின் மேக்சீம் க்ரெசியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார். சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த இப்போட்டியில் 6-2, 7-6, 6-7, 7-5 என்ற செட்கள் கணக்கில் மெத்வதேவ் போராடி வெற்றி பெற்றார்.

image

மற்றொரு போட்டியில் கிரீஸ் நீட்டின் ஸ்டெபானஸ் சிட்டிஷ்பாஸ் அமெரிக்காவின் டைலர் ஃப்ரிஸை 4-6, 6-4, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலேப்பை வீழ்த்தி பிரான்ஸ் வீராங்கனை அலீஸ் கார்னெட் காலிறுதிக்கு முன்னேறினார். சுமார் 3 மணி நீடித்த இப்போட்டியில், 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கார்னெட் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அலீஸ் கார்னெட் காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை ஆகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments