Advertisement

விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம்: ரூ.10 கோடிக்கு மேல் ஏலம் போன வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் ஏலத்தில் 8 வீரர்கள் 10 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.

ஐபில் ஏலத்தில் அதிகபட்சமாக இளம் வீரர் இஷான் கிஷன் 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அவருக்கு அடுத்தபடியாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவரை சென்னை அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயரை 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, ஹர்ஷால் படேல் ஆகியோரை தலா 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

image

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரனை அதே தொகைக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

நியுசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்கியுசனை குஜராத் டைடன்ஸ் அணி 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

தமிழக வீரர் ஹாருக்கானை 9 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments