Advertisement

ஐபிஎல் 2022: லோகோவை வெளியிட்டது 'குஜராத் டைட்டன்ஸ்' அணி

எதிர்வரும் 2022 ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. அதில் ஒன்றுதான் குஜராத் டைட்டன்ஸ் அணி. தற்போது அந்த அணியின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. வெர்ச்சுவல் நிகழ்வாக மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்வில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இளம் வீரர் ஷூப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இந்த லோகோ திரிகோண வடிவில் மேல்நோக்கி இருக்கிறது. பட்டத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அந்த மாநிலத்தில் கலாசாரத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. 

image

குஜராத் டைட்டன்ஸ் அணி விவரம்!

ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான், ஷுப்மன் கில், முகமது ஷமி, ஜேசன் ராய், பெர்க்யூசன், மேத்யூ வேட், அபினவ் சதராங்கனி, ராகுல் தெவாட்டியா, நூர் அகமது, ஆர்.சாய் கிஷோர், டொமினிக் டிரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், தர்ஷன் நல்கண்டே, யாஷ் தயால், அல்சாரி ஜோசப், பிரதீப் சங்வான், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, குர்கீரத் சிங், வருண் ஆரோன், சாய் சுதர்சன். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments