Advertisement

டி20 தொடரை வெல்லுமா இந்தியா? தோல்வியிலிருந்து மீளுமா இலங்கை?

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி, இன்று தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டி20 தொடர் நேற்றுமுன்தினம் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோ நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 3 போட்டிகள் டி20 தொடரில் 1 - 0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் கடைசி 2 போட்டிகள், இன்று மற்றும் நாளை என அடுத்தடுத்து இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

image

முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்றதுடன், 2-வது டி20 போட்டியில் தொடரை கைப்பற்றும் முனைப்போடு இந்திய அணி களமிறங்க உள்ளது. அதேவேளையில் முதல் போட்டியில் அடைந்த தோல்வியை சரிசெய்யும் வகையில், இலங்கை அணியும் இன்று நடக்கும் 2-வது டி20 போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்க உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்தியா உத்தேச அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments