சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி 20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள்அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற கடைசி டி 20 ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஆட்டங்கள் கொண்ட தொடரைமுழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்ற இந்தியஅணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகள் மதிப்பீடு புள்ளிகளை (269) ஒரே மாதிரியாக பெற்ற போதிலும் ஒட்டுமொத்த புள்ளிகள் கணக்கில் இந்திய அணி 10,484 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இங்கிலாந்து 10,474 புள்ளிகளை பெற்று 2-ம் இடத்தில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments