ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிது, அனாமிகா ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவுகுத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிது, ரஷ்யாவின் யூலியா சும்கலகோவாவை எதிர்த்து மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம்செலுத்திய நிது 5-0 என்ற கணக்கில்வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments