இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய அணியில் இளம் தொடக்க வீரர் இஷான் கிஷன் பேட் செய்த போது பந்து அவரது தலையை தாக்கியிருந்தது. அதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
— Rishobpuant (@rishobpuant) February 26, 2022
இரண்டாவது டி20 போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. அந்த பந்தை பவுன்சராக வீசியிருந்தார் குமாரா. தொடர்ந்து அவருக்கு களத்தில் இந்திய மருத்துவக் குழுவினர் சோதனையிட்டனர். பின்னர் கிஷன் சில பந்துகள் விளையாடி அவுட்டானார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Indian cricketer Ishan Kishan is under medical examination after getting hit on the head during India vs Sri Lanka 2nd T20I. Sri Lanka player Dinesh Chandimal was also taken to hospital as part of precautionary measures after an injury: Himachal Pradesh Cricket Association</p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1497657588842102784?ref_src=twsrc%5Etfw">February 26, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் காயமடைந்த இலங்கை வீரர் தினேஷ் சண்டிமாலுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments