Advertisement

“மிகவும் ஸ்பெஷலான போட்டி. ஆரம்பிக்கலாங்களா?” -100வது போட்டி குறித்து விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நாளை தனது நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். அவரது இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில் நூறாவது போட்டி குறித்து தனது எண்ண ஓட்டத்தை பகிர்ந்துள்ளார் கோலி. 

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

மொகாலியில் நடைபெறும் இந்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ரோகித் டெஸ்ட் அணியை வழிநடத்துகிறார். மறுபக்கம் அணியில் இளம் வீரர்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

“இதுவரையிலான இந்த சிறப்பான பயணத்திற்கு நன்றி. இது ரொம்பவே முக்கியமானதொரு நாளாக அமைந்துள்ளது. மேலும் இது ஸ்பெஷலான நாளும் கூட. காத்திருக்க முடியவில்லை. ஆரம்பிக்கலாங்களா?” என ட்வீட் செய்துள்ளார் கோலி. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments