வருகிற ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு சென்னையில் நடத்தவுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டிகளுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 2ஆயிரத்து 500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் சதுரங்க தலைநகராக விளங்கும் தமிழகத்தில் இந்த போட்டிகள் நடத்தப்படுவது சிறப்பாக பார்க்கப்படுவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கே உரித்தான விருந்தோம்பலை வெளிகாட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments