நடப்பு சீசனின் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் மகேந்திர சிங் தோனி. தற்போது ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன். இவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2010 வரையில் விளையாடியவர்.
“சென்னை, கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கலாம். ஆனால் அந்தத் தோல்வி அவர்களை சோர்ந்து போக செய்யாது. சென்னை அணியின் டாப் ஆர்டர் துரிதமாக அவுட்டானது அரிதான ஒரு தருணம். ஆனால் அந்த அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு உள்ள அனுபவத்தினால் அடுத்த போட்டியில் அவர்களை வலுவாக கம்பேக் கொடுக்க செய்யும்.
முதல் போட்டியில் மொயின் அலியை மிஸ் செய்தது. ஆனால் இப்போது அவர் ஆடும் லெவனில் இடம் பிடிக்கத் தயாராக உள்ளார். நிச்சயம் அவர்கள் அபாயகரமான அணியாக திகழ்வார்கள்” என ஹேடன் தெரிவித்துள்ளார்.
சென்னை அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் விளையாடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments