Advertisement

சுரேஷ் ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குஜராத் டைடன்ஸ்

‘தளபதி’, ‘மிஸ்டர்.ஐபிஎல்’, ‘சின்னத் தல’ என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் அன்போடு போற்றப்படுபவர் சுரேஷ் ரெய்னா. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2008 முதலே ஐபிஎல் களத்தில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா 5528 ரன்கள் எடுத்துள்ளார். 

image

இருந்தாலும் அவரை எதிர்வரும் 15-வது ஐபிஎல் சீசனில் எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன்வரவில்லை. அவர் காலம் காலமாக விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதற்கு முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்னாவின் தீவிர ரசிகர்கள் அவரை ஏலத்தில் எடுக்குமாறு சென்னை அணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இந்த நிலையில் புதிதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ட்ரி கொடுத்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை ஏலத்தில் எடுத்திருந்தது. தற்போது பயோ பபூள் அசவுகரியங்களால் விலகுவதாக ராய் அறிவித்துள்ளார். அதனால் அவருக்கு மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணி ரெய்னாவை பிக் செய்யுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். முன்னதாக ரெய்னா 2016 மற்றும் 2017 சீசன்களில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அதனால் அவரை பிக் செய்ய வேண்டுமெனவும் ரசிகர்கள் சொல்லியிருந்தனர். ஆனால் ரசிகர்களின் கோரிக்கையை குஜராத் டைட்டன்ஸ் அணி கிட்டத்தட்ட நிராகரித்துள்ளதாகவே தெரிகிறது. அப்படி தான் நமக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

image

ஜேசன் ராய் ஒரு தொடக்க ஆட்டக்காரர். அதனால் ரெய்னாவை ராய்க்கு மாற்று வீரராக சேர்ப்பது குறித்து குஜராத் அணி அறவே பரிசீலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments