Advertisement

'ஹர்திக் பாண்டியா அதற்கு தகுதியானவரே' - குஜராத் டைடன்ஸ்

''ஒரு வெற்றிகரமான மற்றும் மிகச்சிறந்த கேப்டனாக வருவதற்கான தகுதிகள் அனைத்தும் ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குநர் விக்ரம் சோலங்கி.

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ம் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த சீசனில் புதியதாக களம் இறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்  அணிக்கு லோகேஷ் ராகுலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவம் ஹர்திக் பாண்டியாவுக்கு ஐ.பி.எல்.லில் சிறந்த கேப்டனாக உருவாக உதவும் என்று குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் இயக்குநர் விக்ரம் சோலங்கி கூறியுள்ளார்.

image

பேட்டி ஒன்றில் விக்ரம் சோலங்கி கூறுகையில், "ஒரு வெற்றிகரமான மற்றும் மிகச்சிறந்த கேப்டனாக வருவதற்கான தகுதிகள் அனைத்தும் ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது. எங்கள் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக ஹர்திக் பாண்டியா இருந்துள்ளார். மேலும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி போன்ற மற்ற கேப்டன்களிடமிருந்து நிறைய கற்றிருப்பார். அந்த படிப்பினைகளைக் கொண்டு ஒரு கேப்டனாக தன்னை வளர்த்துக் கொள்வதில் நிச்சயம் அவர் முனைப்பு காட்டுவார். ஹர்திக் பாண்டியாவுக்கு எங்கள் அணி நிர்வாகம் முழு ஆதரவளிக்கும்.

ஹர்திக் தனது விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் மீண்டு வருவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவற்றில் வேகம் பெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காதலியை கரம்பிடித்தார் 22 வயதே ஆன இளம் வீரர் ராகுல் சஹார்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments