போதைப்பொருள் வைத்திருந்த புகாரில் அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனையை ரஷ்யா கைது செய்துள்ளது.
உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில் இதை மையமாக வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதார தடைகளை தொடர்ச்சியாக விதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர்-ஐ தனது பெட்டியில் திரவ வடிவ போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறி அவரை ரஷ்ய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதாகியுள்ள வீராங்கனை பிரிட்னி கிரினர் இரு முறை தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க கூடைப்பந்து அணிகளில் இடம் பெற்றிருந்தவர் ஆவார். இந்த கைது நடவடிக்கை கடந்த மாதமே நடந்திருந்த நிலையில் அதை ரஷ்ய சுங்கத்துறை தற்போது அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தங்கள் நாட்டு வீராங்கனையை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments