சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 50 ரன்களை சேர்த்திருந்தார். இருந்தும் இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்திற்கு பிறகு தோனி குறித்த தனது கருத்தை சொல்லியுள்ளார் கொல்கத்தாவின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.
“களத்தில் தோனி எப்போது பேட் செய்தாலும் ஒரு டென்ஷன் இருக்கும். ஆட்டத்தின் மொண்மடம் அவர்கள் பக்கம் திரும்பும் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் பனிப்பொழிவு இருந்தது. அதனால் பந்தை கிரிப் (இறுக்கமாக பற்றுவது) செய்வது கடினமாக இருந்தது. ஐபிஎல் அரங்கில் புதிய அணியுடனான கொல்கத்தாவுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி” என வெற்றிக்கு பிறகு சொல்லியுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர்.
சென்னை அணி இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது. அடுத்ததாக வரும் 31-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது சென்னை. கொல்கத்தா அணி வரும் 30-ஆம் தேதி பெங்களூரு அணியுடன் விளையாடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments