ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய லதீஸ் மலிங்காவின் சாதனையை, சென்னை வீரர் பிராவோ சமன் செய்தார்.
122 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா இதுவரை 170 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் பிராவோ சமன் செய்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
விக்கெட் வீழ்த்திய போது பிராவோ ஆடிய புதிய நடனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிக்க: “எல்லாப் போட்டிகளிலும் தோனி விளையாட வாய்ப்புள்ளதா?” - முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments