Advertisement

'பிராவோ நீங்க கீப்பிங் பண்ணுங்க, நான் பவுலிங் பண்றேன்' கலாய்த்து தள்ளிய தோனி!

பிராவோவை குறிப்பிட்டு தோனி கலகலப்பாக பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகிக் கொண்டார். இதனால், அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்ட தோனி, பேட்டிங்கில் இந்த முறை பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், தோனி, பிராவோ மற்றும் ருத்துராஜ் ஆகியோர் இருக்க, சில புகைப்படங்களை காட்டி அதற்கு விளக்கங்கள் கேட்கப்படுகிறது. இதில், பிராவோவுடன், தான் இருக்கும் புகைப்படம் பற்றி தோனி கலகலப்பாக சொன்னது வைரலாகி வருகிறது.

image

"இத்தனை ஆண்டுகளில், நான் பிராவோவிடம் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று சொன்னதே இல்லை. ஆனால், எப்படி பவுலிங் போடக்கூடாது என்று சொல்லியுள்ளேன். எப்படி வேண்டுமானாலும் பந்து வீசுங்கள். ஆனால், சில வேரியேஷன்களை முயற்சி செய்ய வேண்டாம் என கூறுவேன். சில நேரங்களில், பிராவோவின் ஓவரில் ரன்கள் செல்ல ஆரம்பிப்பதை பார்க்கும் போது, அவரிடம் கீப்பிங் க்ளவுஸை கொடுத்து விட்டு நான் பந்து வீசலாமா என்று கூட யோசித்துள்ளேன். அதை விட ஒன்றும் மோசமாக நான் நிச்சயம் பந்து வீச மாட்டேன்" என சிரித்துக் கொண்டே தோனி பதில் சொன்னார். இதைக் கேட்ட மற்றவர்களும் சிரித்தபடி  இருந்தனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 6-வது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. அடுத்ததாக மே 1ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.



இதையும் படிக்கலாமே: 'ஏழ்மையான குடும்பம், விடாமுயற்சி' - ஐபிஎல்லின் புதிய புயல் குல்தீப் சென்னின் கதை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments