''விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா'' என சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் பாலிவுட் நடிகர் கேஆர்கே
விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறி வருகிறார். இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கோலி.
விராட் கோலி தொடர்ந்து திணறிவரும் நிலையில், நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகுதான் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாலிவுட் நடிகர் கேஆர்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா. இதனால் அனுஷ்காவை விவாகரத்து செய்தால் மட்டுமே கோலியால் பழைய மாதிரி விளையாட முடியும். அவரை திருமணம் செய்த பிறகுதான் விராட் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது''என்று ட்வீட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் குறிப்பிடுகையில், ''ஒரு வீரர் ஃபார்மில் இல்லாததும், ஃபார்முக்கு திரும்புவதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். இவ்வாறிருக்கையில் விராட் கோலியின் ஆட்டத்திறனை அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் முடிச்சு போடுவதா?'' எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும் நடிகர் கே.ஆர்.கே.விற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். பலத்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து நடிகர் கேஆர்கே அந்த ட்விட்டை நீக்கி விட்டார்.
பாலிவுட் நடிகர் கேஆர்கே அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதும், நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதற்காக கேஆர்கேவின் சமூக வலைத்தளப் பக்கங்கள் பலமுறை முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 'பிராவோ நீங்க கீப்பிங் பண்ணுங்க, நான் பவுலிங் பண்றேன்' கலாய்த்து தள்ளிய தோனி!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments