Advertisement

ஐபிஎல்: குஜராத் வெற்றிக்கு தடை போடுமா பெங்களூரு? - இன்று மோதல்

ஐபிஎல் போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறும் 43வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா  தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 1 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா 305 ரன் அடித்துள்ளார். டேவிட் மில்லர், சுப்மான் கில், அபினவ் மனோகர் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் முகமது ஷமி, பெர்குசன், ரஷீத் கான், யாஷ் தயாள் ஃபார்மில் உள்ளனர்.

image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், பெங்களூரு அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. ஏனென்றால் இந்த ஒரு வெற்றியின் மூலம் அந்த அணி 4வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். ப்ளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகும்.

கடைசியாக ஆடிய இரு லீக் ஆட்டத்திலும் அடைந்த படுதோல்வியால் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ள பெங்களூரு அணி, அதில் இருந்து மீண்டு வரும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். அதேநேரம் வெற்றி நடையை தொடரும் முனைப்பில் குஜராத் அணி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ஐபிஎல் போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன்,  முகமது ஷமி, யாஷ் தயாள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய் / மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்க, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்

இதையும் படிக்கலாமே: ஐபிஎல்: கடைசி ஓவரில் அசத்திய ஆவேஷ் கான் - 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments