ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்.
வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில் என்ற இடத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து, தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆஸ்திரேலிய அணிக்காக சைமண்ட்ஸ், 26 டெஸ்ட் போட்டிகள், 198 ஒரு நாள் போட்டிகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற பெயர் பெற்ற சைமண்ட்ஸ், கடந்த 2012-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அண்மையில் ஆஸ்திரேலியா வீரர்களான ரோட்னி மார்ஷ் மற்றும் ஷேன் வார்ன் உயிரிழந்தனர். இதனால், கடந்த 5 மாதங்களில் மட்டும் 3 ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்திருப்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிக்கலாம்: 'தீப்பிடிக்க…தீப்பிடிக்க...திருமணம்' - உடலில் தீவைத்து மணம் முடித்த ஹாலிவுட் ஸ்டண்ட் ஜோடி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments