ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மற்றொரு அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தொடர் தோல்விகளால் துவண்டு காணப்பட்ட சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டதுமே உற்சாகம் பிறந்தது. அதன்படி மூன்று வெற்றிகளுடன் இருந்த சென்னை அணி நவி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்கமே சிறப்பாகவும் அதிரடியாகவும் அமைந்தது.
ருதுராஜ் கெய்க்வாட்- கான்வே இணை முதல் விக்கெட்க்கு 110 ரன்கள் குவித்தது. ருதுராஜ் 41 ரன்களிலும், சதத்தை நெருங்கிய கான்வே 87 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அடுத்து களறிங்கிய ஷிவம் துவே, வந்த வேகத்திலேயே பேட்டை சுழற்ற ரன்ரேட் மேலும் அதிகரித்தது. அவர் 19 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் கேப்டன் தோனி 2 சிக்சர்கள் உள்பட 21 ரன்கள் விளாச அணியின் ஸ்கோர் 208ஆக உயர்ந்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் மிரட்டலான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் யாரும் களத்தில் நிற்கவில்லை. இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிய டேவிட் வார்னர் 19 ரன்களில் தீக்ஷனா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேஓவரில் ரிஷப் பந்த் 3 பவுண்ட்ரிகளை விளாசினார். மிட்செல் மார்ஷ் வாய்ப்புள்ள பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டினார். 7.2 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 72 ரன்களுடன் வலுவாக இருந்தது டெல்லி அணி. ஆனால் மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் ஆகியோர் மொயின் அலி சுழலில் சிக்கி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் மற்ற வீரர்கள் வருவதும் செல்வதுமாக இருந்ததால் சிஎஸ்கே அணியின் வெற்றி உறுதியானது. 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து டெல்லி அணி மோசமான தோல்வியை சந்தித்தது. டெல்லி அணி 45 ரன்களை சேர்க்க 8 விக்கெட்களை பறிகொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியது. எனினும் பிளே ஆஃப்க்கான வாய்ப்பு என்பது அற்புதம், அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே
இதையும் படிக்கலாம்: ஐபிஎல் நிர்வாகம் மரியாதையாக நடத்தவில்லை - கிறிஸ் கெய்ல் ஓபன் டாக்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments