Advertisement

பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்துவிட்டார் - ஹர்பஜன் சிங் புகழாரம்!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்திக் அபாரமாக பந்துவீசியதை அடுத்து “பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்துவிட்டார்” என்று ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் அவுட்டாகி வெளியேற, பட்லரும் கேப்டன் சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி வந்தனர். அப்போது 9வது ஓவரில் பந்துவீச வந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

தான் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி அதிர வைத்தார் கேப்டன் ஹர்திக். அந்த முதல் ஓவரில் வெறும் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஹர்திக். அவர் வீசிய 2வது ஓவரில் விக்கெட் விழவில்லை என்றாலும் 4 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது. அடுத்து அவர் வீசிய 3வது ஓவரில் முதல் பந்திலேயே ராஜஸ்தானுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அதிரடி வீரர் பட்லரின் விக்கெட்டை அசால்ட்டாக வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. ராஜஸ்தான் பேட்டிங் ஆர்டரின் மொத்த நம்பிக்கையும் தூள் தூளான தருணம் அது. அந்த 3வது ஓவரிலும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவர் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய ஹெட்மேயரை அந்த ஓவரின் கடைசிப் பந்தில் வீழ்த்தி கணக்கை நேர் செய்துவிட்டார் ஹர்திக். மொத்தமாக 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 பெரும் தலைகளின் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார் ஹர்திக்.

ஹர்திக்கின் இந்த அபாரமான பந்துவீச்சை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பாராட்டினர். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஆகியோரும் ஹர்திக்கைப் பாராட்டினர். “பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்துவிட்டார்” என்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">HARDIK the BOWLER is back .. what a spell captain <a href="https://twitter.com/hardikpandya7?ref_src=twsrc%5Etfw">@hardikpandya7</a> <a href="https://twitter.com/gujarat_titans?ref_src=twsrc%5Etfw">@gujarat_titans</a></p>&mdash; Harbhajan Turbanator (@harbhajan_singh) <a href="https://twitter.com/harbhajan_singh/status/1530941102412468224?ref_src=twsrc%5Etfw">May 29, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments