இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறத் தவறியது. சூப்பர் நான்கு (SUPER 4) சுற்றில் தென்கொரியாவுக்கு எதிரான முக்கியத்துவம் மிகுந்த கடைசி ஆட்டத்தில் இந்திய அணி நான்கிற்கு - நான்கு என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப், மணீந்தர் சிங், சேஷே கவுடா, மாரீஸ்வரன் தலா ஒரு கோல் அடித்தனர்.
சூப்பர் 4 சுற்றில் மலேசியா, கொரியா, இந்தியா ஆகிய மூன்று அணிகள் தலா 5 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தன. கோல் விகித அடிப்படையில் மலேசியா மற்றும் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்த்து விளையாடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments