தன்னை ஜோஸ் பட்லரின் மனைவி என்று நிறைய பேர் நினைத்து கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் தென்னாப்பிரிக்க ரஸ்ஸி வான் டெர் டசெனின் மனைவி லாரா கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜோஸ் பட்லர், இந்த சீசனில் 16 போட்டிகளில் பங்கேற்று 824 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும். இதனிடையே, தன்னை ஜோஸ் பட்லரின் மனைவி என்று நிறைய பேர் நினைத்து கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் தென்னாப்பிரிக்க வீரர் ராசி வாண்டர்டசனின் மனைவி லாரா கூறியுள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின்போது ஏதேனும் ஒரு வீரர் பெரிய ஷாட் அடிக்கும் போது அல்லது அரைசதம்/சதம் அடிக்கும் போதெல்லாம் கேமிராக்கள் அந்த வீரரின் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களை தேடித்தேடி காட்டும். அந்தவகையில் ஜோஸ் பட்லர் ஆடும்போது சிலமுறை சகவீரர் ரஸ்ஸி வான் டெர் டசெனின் மனைவியான லாராவை கேமாரவில் காட்டியிருக்கிறார்கள். இதனால் பல ரசிகர்கள் தன்னை ஜோஸ் பட்லரின் மனைவி என்று தவறாக நினைக்கிறார்கள் என ரஸ்ஸி வான் டெர் டசெனின் மனைவி லாரா கூறியுள்ளார்.
இதுகுறித்து லாரா கூறுகையில், ''நான் ஜோஸ் பட்லரின் மனைவி என்று ரசிகர்கள் தவறாக நினைக்கிறார்கள். அவர் சிக்சர் அடிக்கும் போது நான் சில முறை கேமராவில் காட்டப்பட்டதால் அவ்வாறு என நினைக்கிறேன். யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீயும் நானும் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்போம். எங்களால் எங்களை கட்டுப்படுத்த முடியாது. அதனால் ஒருவேளை நான் அவருடைய குடும்பத்தின் ஒரு பகுதியாக நினைத்துக்கொண்டிருக்கலாம், இது மிகவும் சுவாரஸ்யமானது. ரஸ்ஸி ஐபிஎல்லில் அதிகம் விளையாடாததால், அதே உணர்வை அவரிடம் காட்ட முடியவில்லை'' என கூறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அனியில் ரூ.1 கோடிக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஸ்ஸி வான் டெர் டசென், இந்த சீசனில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2வது தகுதிச் சுற்றில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதையும் படிக்கலாம்: சிக்ஸர்களை வாரி வழங்கிய மோசமான சாதனை.. முதலிடத்தில் ஆர்சிபி பவுலர்கள்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments