மும்பை: "எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது" என தெரிவித்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. அவரது மோசமான ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டை தனது பேட்டையாக மாற்றி, அதில் பேட் கொண்டு ஆட்சி செய்து வரும் அரசன் தான் இந்திய வீரர் விராட் கோலி. ஒருநாள், டி20, டெஸ்ட் என இந்தியாவுக்காக மொத்தம் 23650 ரன்கள் எடுத்துள்ளார். அது தவிர ஐபிஎல் களத்தில் 6499 ரன்கள் சேர்த்துள்ளார். தனியொரு பேட்ஸ்மேன் பதிவு செய்த அதிகபட்ச ரன்கள் இது. அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனைகளுக்கான மைல் கற்களாக மாற்றி அமைப்பவர். நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments