Advertisement

4-வது முறையாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா - தொடரை கைப்பற்றப் போவது யார்?

இந்திய அணிக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் நான்காவது மறையாக டாஸ் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி வழக்கம்போல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒடிசாவில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறும் 4-வது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 4-வது முறையாக டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

image

இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கிறது. இன்றையப் போட்டி தென்னாப்பிரிக்கா அணிக்கு வாழ்வா சாவா போராட்டமாகும். ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளில் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயலும். அதேபோல் தொடர் தோல்விகளுக்குப் பிறகு 3-வது போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றியை இந்தப் போட்டியில் தடுக்க முயற்சித்து சமன் செய்ய பார்க்கும்.

இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. தென்னாப்பிரிக்கா அணியில் மட்டும் ஹென்ரிக்ஸ் நீக்கப்பட்டு மீண்டும் குயிண்டன் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ரபாடா நீக்கப்பட்டு அவருக்கு பதலாக லங்கி நிகிடியும், பார்னல் நீக்கப்பட்டு மார்கோ ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார்

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், சாஹல், அவேஷ் கான்.

தென் ஆப்பிரிக்கா:

குவிண்டன் டிகாக், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், பிரடோரியஸ், ரபாடா, கேஷவ் மஹராஜ், ஷம்சி, நோர்ஜே, லுங்கி நிகிடி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments