தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் அதை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் இலங்கை தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் இந்த தொடர் சமனில் உள்ளது. தற்போது நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்.
இந்தியா
தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், சேதன் சக்காரியா, வருண் சக்ரவர்த்தி.
இலங்கை
அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பனுகா (விக்கெட் கீப்பர்), சமரவிக்ரமா, நிசங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணாரத்னே, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீரா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments