டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சீனாவின் ஹி பி ஜியாவுடன் இன்று மணிக்கு மோதுகிறார்.
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையும் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து அவர் காலிறுதி தகுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் 5-வது வரிசையில் உள்ள யமகுச்சியை (ஜப்பான்) 21-13, 22-20 என்ற கணக்கிலும் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரை இறுதியில் பி.வி.சிந்து நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து பி.வி.சிந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவை சேர்ந்த ஹி பி ஜியாவ்வை சந்திக்கிறார். இதில் அவர் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெறுவாரா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments