விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் இந்திய அணிக்கு எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதன் திறனை பரிசோதிக்கும் மிகப்பெரிய பலப்பரீட்சையாக இருக்கும் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண்.
“டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ள பெரிய சவால்களில் ஒன்று வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடுவது. கடந்த 2007-க்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை என்பதை ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி என இருவரும் அறிந்திருப்பார்கள். அதனால் அந்த போக்கை மாற்ற வேண்டுமென அவர்கள் எண்ணுவார்கள். அதனை சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பும் அமைந்துள்ளது.
அதே போல எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்த இங்கிலாந்து தொடர் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலப்பரீட்சையாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா சென்று விளையாட இருந்தாலும் இங்கிலாந்தில் பெறும் வேற்று வேறு ரகம்” என லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments