Advertisement

ஒலிம்பிக் வெண்கல பதக்கத்திற்கான போட்டி: ஜெர்மனியுடன் மோதுகிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியுடன் விளையாடுவது உறுதியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஜெர்மனி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று காலை 07:00 மணி அளவில் நடைபெறுகின்ற இந்த போட்டியில், இரு அணிகளும் மோத உள்ளன. 

ரியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனி வெண்கல பதக்கம் வென்றிருந்தது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் கடைசியாக 1980-இல் நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது. இந்த முறை வென்றால் சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியா பெறும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments