இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் கீப்பிங் கிளவுஸில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை (Tape) அகற்றுமாறு நடுவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பேரில் அதனை இந்திய கேப்டன் கோலி அகற்றினார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் லீட்ஸ் - ஹெட்டிங்கிலே மைதானத்தில் தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 78 ரன்களில் ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 432 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் மலான் 70 ரன்கள் எடுத்து சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவர் கொடுத்த கேட்சை பண்ட் பிடித்திருந்தார். அது தான் சர்ச்சையானது.
பண்ட் வழக்கத்திற்கு மாறாக தனது கீப்பிங் கிளவுஸில் நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலை சேர்த்து டேப் அடித்திருந்தார். அதை கவனித்த நடுவர்கள் அதனை அகற்றுமாறு தெரிவித்தனர். போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த டேவிட் லாயிட் ‘மலான் விளையாட மீண்டும் அழைக்கப்பட வேண்டும்’ என சொல்லி இருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments