நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா, டெல்லியை முதலில் பேட் செய்ய சொல்லி பணித்தது.
அந்த அணியில் 127 ரன்களில் கட்டுப்படுத்தினர் கொல்கத்தா பவுலர்கள். அதன் மூலம் கேப்டன் மோர்கனின் டாஸ் கணக்கு சரி என்பதை நிரூபித்தனர்.
தொடர்ந்து கொல்கத்தா இலக்கை விரட்டியது. கில், வெங்கடேஷ் ஐயர் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஐயர், திரிபாதி என இரண்டு பேரின் விக்கெட்டுகளை டெல்லி பவுலர்கள் தூக்கி இருந்தனர். தொடர்ந்து நித்திஷ் ராணா வந்தார். கில் 30 ரன்களில் அவுட்டானார்.
கேப்டன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் சோபிக்க தவறினர். தொடர்ந்து வந்த பின்ச் ஹிட்டரான சுனில் நரைன், 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். கிட்டத்தட்ட கொல்கத்தா அணியின் வெற்றியை அவர் உறுதி செய்தார். நித்திஷ் ராணா 27 பந்துகளில் 36 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
முடிவில் 18.2 ஓவர்களில் கொல்கத்தா டெல்லியை வீழ்த்தியது. ஆட்டத்தின் திருப்பு முனையாக ரபாடா ஓவரில் நரைன் விளாசிய அந்த இரண்டு சிக்ஸர் அமைந்தது. அதேபோல், லலித் யாதவின் கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டதும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இல்லாத நிலையில் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் டெல்லி அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments