Advertisement

PBKS vs MI : டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் ஐபிஎல் களத்தில் 27 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளன. அதில் மும்பை 14 ஆட்டங்களிலும், பஞ்சாப் 13 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் விளையாடியதில் பஞ்சாப் வென்றிருந்தது.  

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்கலாம். 

ஆடும் லெவன் விவரம்... 

பஞ்சாப் கிங்ஸ்!

கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்பிரீத் பிரார், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

மும்பை இந்தியன்ஸ்!

ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவூரப் திவாரி, க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments