Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் 4வது போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
 
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ளன. மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது. இதனால் 4ஆவது போட்டியில் வென்று தொடர் வெற்றியை நெருங்க இரு அணிகளும் முனைப்புடன் உள்ளன. முதல் 3 போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்படாத நிலையில் இன்று தொடங்கும் போட்டியில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
 
image
இதற்கிடையில் இத்தொடரின் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமைய வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் தொடரை வெல்ல இங்கிலாந்து முனையும் என்றாலும் தாங்களும் வெற்றிக்காக கடுமையாக போராடுவோம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments