Advertisement

யு-19 உலகக் கோப்பை: அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா

19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இன்று மோதுகிறது.

மேற்கிந்திய தீவுகளில் ஐ.சி.சி.யின் 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளநிலையில், ஆன்டிகுவா கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 6.30-க்கு தொடங்கும் அரையிறுதியில், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.  பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளை தோற்கடித்து, ஹாட்ரிக் வெற்றி அடைந்து, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல் காலிறுதியில் நடப்பு சாம்பியனான வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பையை ஏற்கனவே 4 முறை வென்றுள்ள இந்திய அணி, தொடர்ந்து 4-வது முறையாக அரையிறுதியில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி அரையிறுதியில் 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் குணமாகி முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகி உள்ளதால், இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments