
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்கிறது.
ஷார்ஜாவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
அணி விவரம்
பஞ்சாப் கிங்ஸ்: கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில், மார்க்ராம், பூரண், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், முகமது சமி, ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், நாதன் எலீஸ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், சாஹா, கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதந், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments