
நடப்பு ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகின்றன. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். புழுதி புயலால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த சீசனில் இதற்கு முன்னதாக இந்த இரு அணிகளும் விளையாடியதில் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு முன்னதாக இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி விளையாடிய 26 ஆட்டங்களில் சென்னை 17 போட்டிகளிலும், பெங்களூர் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் சென்னை அணியின் ஆதிக்கம் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சீசனில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையினலான புள்ளிப்பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்திலும், பெங்களூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஆடும் லெவன் விவரம்...
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், மொயின் அலி, ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசல்வுட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கோலி (கேப்டன்), படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டிம் டேவிட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.
இதையும் படிக்கலாம் : ஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments