Advertisement

“சென்னை அணிக்கு எனது பந்து வீச்சின் மூலம் அழுத்தம் கொடுப்பேன்” - முகமது சிராஜ்

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசுகிறது. 

image

இந்த போட்டியில் டாஸ் வீசுவது புழுதிப்புயலால் தாமதமானது. இந்நிலையில் பெங்களூர் அணியின் பவுலர் முகமது சிராஜ் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக பேட்டி அளித்துள்ளார். 

“இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான் ஒரே ஒரு திட்டத்துடன் தான் விளையடினேன். நான் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்பதால் ஆட்டத்தில் அழுத்தம் கொடுக்க அதிக மெய்டன் ஓவர்களை வீசுவது என முடிவு செய்து விளையாடினேன். 

அது எதிர் முனையில் பந்து வீசும் பவுலர்களுக்கு உதவும் எனவும் நினைத்தேன். அதே போல இந்த ஐபிஎல் சீசனிலும் விளையாட உள்ளேன்.

image

சைனி, ஜேமிசன், நான் என மூவரும் நிறைய பேசி உள்ளோம். டெத் ஓவர்களில் யார்க்கர், ஸ்லோ பால் என நிறைய முயற்சிகளை வலை பயிற்சியின் போது வீசி பரிசோதித்துப் பார்த்தேன். அதை ஆட்டத்திலும் வீசுவேன். 

நியூ பாலில் விக்கெட் வீழ்த்த ஆர்வமாக உள்ளேன். ருதுராஜ், சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். எனது பங்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் சென்னை அணிக்கு அழுத்தம் கொடுப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்கலாம் : ஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments