விளையாட்டுத் துறையில் உயரிய அங்கீகாரமான கேல் ரத்னா விருதுக்கு நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 11 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இத்துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், மல்யுத்த வீரர் ரவி தாஹியா, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, பேட்மிண்டன் வீரர்கள் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்னன. கிரிக்கெட் வீரர் தவான் உள்ளிட்ட 35 பேர், அர்ஜுனா விருதுக்கு தேசிய விளையாட்டு விருது குழுவால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments