வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மத ரீதியான விமர்சனங்களுக்குள்ளான நிலையில், பும்ரா மற்றும் புவ்னேஷ்வர் குமார் மட்டும் குறிப்பிட்ட மதம் என்பதால் சிறப்பாக பந்து வீசி விட்டனரா? என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் முகமது ஷமி மீது விஷமத்தனமான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் விளையாட்டு தொடர்பான இணையதள பக்கத்திற்கு பேட்டியளித்த கம்பீர், ஷமி மதம் சார்ந்து சிறப்பாக பந்து வீசவில்லை என்றால், பும்ரா மற்றும் புவ்னேஷ்வர்குமார் குறிப்பிட்ட மதம் என்பதால் சிறப்பாக பந்து வீசி விட்டனரா என வினவியுள்ளார்.
இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 7: 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' - மரமும் மரம் சார்ந்த மகத்தான செயலி!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments