ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
அந்த அணிக்காக எவின் லூயிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெயஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரில் எவின் லூயிஸ் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, கிளென் பிலிப்ஸ், ராகுல் தெவாட்டியா, ஷ்ரேயஸ் கோபால், டேவிட் மில்லர், சக்காரியா ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
நாதன் குல்டர் நைல் (4), ஜேம்ஸ் நீஷம் (3), பும்ரா (2) மாதிரியான பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களம் இறங்க உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments