Advertisement

டி20 உலகக்கோப்பை: மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது தென்னாப்ரிக்கா

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில், மேற்கு இந்திய தீவுகள் அணியை தென்னாப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் சற்று தடுமாறினாலும், மேற்கு இந்திய தீவின் தொடக்க வீரர் லிவிஸ், அதிரடி காட்டினார். 35 பந்துகளை சந்தித்த அவர், 6 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அனுபவ வீரர்கள் கெயில், ரஸல், பூரன் உள்ளிட்டோர் சோபிக்காத நிலையில், கேப்டன் க்ரைன் பொல்லார்டு மட்டும் கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாட மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. தென்னாப்ரிக்க வீரர் டிவைன் ப்ரட்ரோரியஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

imageஇதையடுத்து தென்னாப்ரிக்கா ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், கேப்டன் பவுமா 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஹென்றிக்ஸ் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து வந்த மார்க்ரம் அதிரடி காட்ட, தென்னாப்ரிக்கா 18.1 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்க்ரம் 50 ரன்களுடனும், டூசன் 43 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனைப்படிக்க...மதுரை: குடத்திற்குள் தலை மாட்டி ஒருவாரமாக உயிருக்கு போராடிய நாய்: மீட்ட நபருக்கு பாராட்டு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments