ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் பின்லாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிராக வழக்கத்திற்கு மாறாக 8 ஸ்லிப் ஃபீல்டர்களை நிற்க வைத்து திகைப் பூட்டியது.
இந்த அட்டாக்கிங் ஃபீல்ட் செட்-அப்பை பின்லாந்து அணி முதல் ஓவரின் முதல் பந்தில் வைத்திருந்தது. கூடுதலாக லேக் ஸ்லிப் ஃபீல்டர் ஒருவரும் நிற்க வைக்கப்பட்டார். மீதமிருந்த இரண்டு வீரர்களில் ஒருவர் பவுலர், மற்றொருவர் விக்கெட் கீப்பர்.
அந்த அணியின் இந்த ஃபீல்ட் செட்-அப் நெட்டிசன்கள், ரசிகர்கள் என பலரையும் ஈர்த்துள்ளது. பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த தொடரில் குரூப் சி-யில் இடம் பெற்றுள்ள பின்லாந்து அணி, இத்தாலிக்கு எதிரான போட்டியில் மட்டும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments