ஷார்ஜாவில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி நடப்பு சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ரோகித் தலைமையிலான மும்பை அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை 16 முறையும், டெல்லி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பிளே ஆஃப் பந்தயத்தில் தொடர்ந்து பயணிக்க இன்றைய போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷ்ப் பண்ட் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மிக முக்கியமாக பார்க்கப்படும் இன்றையப் போட்டியில் இரு அணிகளும் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் - ஆடு லெவன்
குவிண்டன் டி காக்
ரோகித் சர்மா
சூர்யகுமார் யாதவ்
செளரப் திவாரி
பொல்லார்ட்
ஹர்திக் பாண்ட்யா
குர்ணால் பாண்ட்யா
நாதன் கூல்டர் நைல்
பும்ரா
ஜெயந்த் யாதவ்
ட்ரெண்ட் பவுல்ட்
டெல்லி கேப்பிடல்ஸ் - ஆடு லெவன்
ஷிகர் தவான்
பிரித்வி ஷா
ஸ்டீவ் ஸ்மித்
ஸ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பன்ட்
ஹெட்மயர்
அஸ்வின்
அக்சர் படேல்
ரபாடா
அன்ரிச் நார்ஜே
ஆவேஷ் கான்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments