Advertisement

உள்ளூர் கிரிக்கெட்டில் விக்கெட் மழை: சிஎஸ்கேவில் இடம்பெற்ற இளம் வீரர் ஆசிஃப் - யார் இவர்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் கே.எம்.ஆசிஃப். ஐபிஎல் அரங்கில் சென்னை அணிக்காக அவர் விளையாடும் மூன்றாவது போட்டி இது. இந்த போட்டியில் தீபக் சஹாருக்கு மாற்றாக அவர் அணியில் இடம் பெற்றுள்ளார். 

image

யார் இவர்?

28 வயதான ஆசிஃப், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடவண்ணா பகுதியை சேர்ந்தவர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கேரள அணிக்காக விளையாடி வருகிறார். 

அண்மையில் முடிந்த சையத் முஷ்டக் அலி தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். லிஸ்ட் ஏ மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2018 முதலும், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 2019 முதலும் விளையாடி வருகிறார். 15 டி20, 8 லிஸ்ட் ஏ போட்டிகள், 3 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் மொத்தமாக 36 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.  சராசரியாக மணிக்கு 143.1 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுபவர்.  

image

2018 சீசன் முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணிக்காக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2017 சீசனில் கொல்கத்தா அணியின் நெட் பவுலராக செயல்பட்டவர் ஆசிஃப்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments