Advertisement

அந்த சிக்ஸரை வைத்து தோனி பழைய பார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்க்க கூடாது: மஞ்ச்ரேக்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் பார்ம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

image

“தோனி, ஹைதராபாத் அணிக்கு எதிராக சிக்சர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார். அது அனைவரையும் கவர்ந்திருந்தது. இருந்தாலும் இதை வைத்து தோனி தனது பழைய பேட்டிங் பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பது நல்லதல்ல. அவரது மோசமான பேட்டிங் பார்ம் சென்னை அணிக்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை. சென்னை அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். 

தோனியின் பேட்டிங் பார்ம் மோசமாக இருந்தாலும் கேப்டன்சியில் அவரது பார்ம் மாஸ்” என தெரிவித்துள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். 

அதே நேரத்தில் அவரது கேப்டன்சி ரெக்கார்டை முறியடிக்க எந்தவொரு கேப்டனாலும் முடியாது. ஐபிஎல் அரங்கில் 60.1 சதவிகிதம் வெற்றி விகிதத்தை கொண்டுள்ள கேப்டன் தோனி தான் என தெரிவித்துள்ளார் அவர். 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியையும் சேர்த்து தோனி 200 ஐபிஎல் போட்டிகளில் அணியை கேப்டனாக வழிநடத்தி சென்றவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments