Advertisement

“இந்திய அணியில் திறமையான வீரர்கள் இல்லை” - பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசாக்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடத்தப்படாமல் உள்ளதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக். 

image

பாகிஸ்தான் அணியை போல இந்திய அணியில் திறமை மிக்க வேகப்பந்து வீச்சாளர்களும், ஆல் ரவுண்டர்களும் உள்ளனரா? என அவரிடம் ARY நியூஸ் கிரிக்கெட் ஷோவில் கேட்கப்பட்டது. 

“இந்திய அணியில் திறமைமிக்க வீரர்கள் இல்லை என நினைக்கிறேன். அதனால் பாகிஸ்தானுடன் இந்தியாவால் போட்டிபோட முடியாது. பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமை முற்றிலும் மாறுபட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் உள்ளது கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல. 

இந்தியா - பாகிஸ்தான் தொடர் அற்புதமான வாய்ப்பு. ஆட்டத்தில் அழுத்தத்தை வீரர்கள் எந்தளவுக்கு சமாளிக்கிறார்கள் என்பதை அறிய இந்த தொடர் உதவியது. அது இப்போது மிஸ் ஆகிறது. இந்த தொடர் தடையின்றி தொடர்ந்திருக்க வேண்டும் என கருதுகிறேன். அது நடத்திருந்தால் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் வீரர்கள் திறமை மிக்கவர்கள் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனால் தான் இந்தியா அந்த தொடரை நடத்த மறுக்கிறது” என தெரிவித்துள்ளார் ரசாக். 

image

மேலும், தொடர்ந்த அவர், “இம்ரான் கான் - கபில் தேவ், வாசிம் அக்ரம், ஜாவித் மியண்டட் - கவாஸ்கர், பிறகு இன்சமாம்-யூனிஸ்-யூசுப்-அஃப்ரிடி மாதிரியான வீரர்களுக்கு இணையாக டிராவிட் மற்றும் சேவாக் தான் இந்திய அணியில் இருந்தனர். ஓட்டுமொத்தமாக இந்த ஒப்பீட்டை பார்த்தால் பாகிஸ்தான் திறமை மிக்க பல வீரர்களை கொண்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் 20 முறை ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் மோதி விளையாடியுள்ளன. அதில் இந்தியா 15 முறை வெற்றி பெற்றுள்ளது. டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதி உள்ளது. அந்த அனைத்து மோதல்களிலும் இந்தியா வென்றுள்ளது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments