Advertisement

ஐ.பி.எல்: இன்றைய ஆட்டத்தில் சென்னை- டெல்லி மோதல்

அனல் பறக்கும் ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும், பண்ட் தலைமையிலான டெல்லி அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

CSK vs DC Preview, IPL 2021: Chennai Super Kings hold the aces against weakened Delhi Capitals | Cricket News - Times of India

முந்தைய போட்டியில் சென்னை அணி தோல்வி கண்டுள்ளதால் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையே புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments