நியூசிலாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக இஷான் கிஷனை களமிறக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற முதல் சூப்பர் 12 லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் தன்னுடைய 2 ஆவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. அவருக்கு பதிலாக யாரை களமிறக்கலாம் என்ற யோசனையில் இந்திய அணி இருக்கிறது.
இந்நிலையில் "Sports Tak"கிற்கு பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் "நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கும் இஷான் கிஷனை களமிறக்கலாம். அவர் இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் பாண்ட்யாவுக்கு பதிலாக நான் அவரையே தேர்ந்தெடுப்பேன். அதேபோல புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்கலாம். இதற்கு மேல் எந்த மாற்றங்களையும் அணியில் மேற்கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் நாம் பயந்துவிட்டோம் என எதிரணியினர் நினைப்பார்கள்" என்றார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments