கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் 2021 ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்றுள்ளது. சத்தியன் ஞானசேகரன், சரத் கமல், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி மற்றும் மானவ் தக்கார் ஆகிய வீரர்கள் அடங்கிய அணி இந்த பதக்கத்தை வென்றது.
இதன் மூலம் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 1976-க்கு பிறகு முதல் முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வீரர்களை பாராட்டி உள்ளது.
தென் கொரிய நாட்டை சேர்ந்த வீரர்களுடன் அரையிறுதியில் விளையாடி இந்திய வீரர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். ஜாங் வூஜின் - சத்தியன் ஞானசேகரன் விளையாடியதில் 3 - 1, லீ சங்ஸு - சரத் கமல் விளையாடியதில் 3 - 2, CHO Seungmin - ஹர்மீத் தேசாய் விளையாடியதில் 3 - 2 எனவும் செட் கணக்கில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவினர். அதனால் பதக்கத்துடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments