இந்திய கிரிக்கெட் அணி தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இடத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் பொருத்தமானவராக இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“இந்திய அணி எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை கொல்கத்தா அணி அடையாளம் காட்டியுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் அவரது பவுலிங் திறன்கள் பெரிய அளவில் வெளிக்காட்டவில்லை. இருந்தாலும் அவர் வீசும் யார்கரை பேட்ஸ்மேன்கள் விளையாட தடுமாறுகின்றனர். ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் சிறப்பாக விளையாடுகிறார்” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐந்து போட்டிகளில் விளையாடி 193 ரன்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். 25 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். பவுலராக இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பிரதான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பெரிய அளவில் பந்து வீச தவறி வருகிறார். இந்த நேரத்தில் வெங்கடேஷ் ஐயரின் ஐபிஎல் சீசனில் படித்துள்ள முத்திரை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியிலும் 67 ரன்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். அற்புதமான ஷாட்டுகளை இன்று அவர் விளாசினார். அவற்றில் கிளாசிக் ரகங்கள் சில.
இதையும் படிக்கலாம் : ஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments